Friday, February 10, 2006

திரைப்பாடல் புதிர் - 1

இந்த சாளரம் பக்கம் வந்து பல நாட்கள் ஆகின்றன. சரி, ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு வரலாம் என்று வந்தேன்.

சமீபத்தில் ஒரு பாடலைக்கேட்டுக்கொண்டிருந்தபோது அதில் அதிகம் கவனிக்கப்படாத இந்த வரி என்னை கவர்ந்தது.

தலையணை முழுதும் கூந்தல் அலைதான்
இருபது விரலும் தீயின் கிளைதான்

இது பிடிப்பதற்கு இதில் வரும் வித்தியாசமான உருவகம் ஒரு காரணம். மற்றொரு முக்கியமான காரணம் இந்த வரிகள் ஏற்படுத்தும் காட்சி.

அதே திரைப்படத்தில் எனக்கு பிடித்த மற்றொரு பாடலின் வரி

நிழலையும் திருடி நேசித்தோம்
கனவிலும் ஒன்றாய் யோசித்தோம்


பாடல்களை சரியாக யூகிப்பவர்களுக்கு (குலுக்கல் முறையில்) ஹமாம் சோப் ஒன்று பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்படுகிறது.


1 comment:

Boston Bala said...

தெரியலீங்களே! (பாடல் வரிகள் நல்லாருக்கு)