Thursday, September 07, 2006

கவிதை - 1

இன்று இரண்டு பாவச்செயல்கள் செய்தேன்
1. கவிதை எழுதியது
2. அதை தைரியமாக என் வலைப்பதிவில் தந்தது

ஒரு காதலன், அவனுடைய காதலிக்காக காத்திருக்கிறான் அதைப்பற்றி இரண்டு வரியில் ஒரு கவிதை வேண்டும் என்று என் நண்பன் கேட்டான். படித்ததில் ஒன்றும் நினைவுக்கு வராததால் நாமே முயற்சிப்போமே என்று எண்ணியதன் விளைவை கீழே கொடுத்திருக்கிறேன்.



காத்திருப்பு
~~~~~~~~~~~~

தண்ணீர் கடிகாரத்தில் சொட்டும் கணங்களாய்
கரைந்து கொண்டிருக்கிறேன்


ஒவ்வொரு சொட்டிலிருந்தும் விரியும்
அலைகளாய் உன் நினைவு



எழுதி முடித்தபின்தான் தெரிந்தது வாரமலர் கவிதை தரத்திற்குதான் என்னால் எழுத முடிகிறது என்ற உண்மை. இருந்தாலும் இதில் இருக்கும் சர்ரியாலிசம் (surrealism) எனக்குப் பிடித்திருக்கிறது. கடிகாரத்தையே பார்த்துக்கொண்டு காத்திருக்கும் ஒருவன் திடீரென தானே கடிகாரமாய் உணர்வதைப்போல ஒரு தோற்றம்.

No comments: