Saturday, June 03, 2006

திரைப்பாடல் புதிர் - 2

எனக்குப் பிடித்த பாடல் வரிகளை அவ்வப்போது இங்கு பதிவுசெய்ய முடிவு செய்ததின் விளைவாக மற்றும் ஒரு பாடல் புதிர். கீழே உள்ள பாடல் வரிகள் இடம் பெற்ற திரைப்படம் மற்றும் பாடலைக் கண்டுபிடிப்பவர்கள் அதை comment-ல் பதிவுசெய்துவிட்டுச் செல்லாம். 

 ~~~~~~~~~~~~~~~  

உள்ளங்கை கடந்து எங்கோ ஒழுகிய நிமிடங்களை  
மெல்லச் சிறை செய்யவே காதல் மீண்டும் பதிவுசெய்தேன் 
 
  ~~~~~~~~~~~~~~~  
 
தூக்கங்கள் உனது கனவெல்லாம் எனது 
   தூக்கத்தைத் தள்ளிப்போடாதே 
பாதைகள் உனது பாதங்கள் எனது  
பயணத்தைத் தள்ளிப்போடாதே 
 
~~~~~~~~~~~~~~~
 
இரண்டுமே சற்று கவனிக்கப்படாத பாடலாக இருந்தாலும் அது வரும் இடம் எளிதில் கண்டுபிடிக்கப்படக்கூடியது. இரண்டாவது பாடல், பதிவுசெய்யப்பட்டு படத்தில் இடம்பெறாமல் தவறிப்போன முக்கியமான பாடல்களில் ஒன்று என்பது எனது கருத்து.

2 comments:

கதிர் said...

காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ - ஜேஜே

அடுத்தது தெரியல!

நல்லா இருக்கு இந்த விளையாட்டு!

MSK said...

உங்கள் விடை சரி. தொடர்ந்து விளையாடுங்கள் :)