Wednesday, September 07, 2005

சித்திரங்களின் உலகம்


சமீபதில் ஒரு புத்தகக்டையில் நின்று தீராநதி, உயிர்மை ஏதாவது வந்துவிட்டதா என்று பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த காமிக்ஸ் புத்தகத்தைப் பார்த்தேன். என்னுடய சிறிய வயது காமிக்ஸ் ஹீரோ கேப்டன் பிரின்ஸ் பொல ஒருவன் அட்டையில் இருந்ததனால் அதை கொடுக்கச் சொல்லி அந்த கடைப் பையனிடம் கேட்டேன். அவன் என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு “சார் அது சின்னபசங்க படிக்கிற காமிக்ஸ் புத்தகம்” என்றான். அந்தக் கடைப பையன் போல இங்கு நிறையபேர் காமிஸ் என்பது சின்னபசங்க மட்டும் படிக்கக்கூடிய விசயம் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் ஆனால் அதற்குப் பின்னால் எத்தனை பெரிய ஆட்களின் creativity, உழைப்பு இருக்கிறது என்பது அவர்களுக்குத் தெரிவது இல்லை. ஒருமுறை காமிக்ஸ் எப்படி உருவாகிறது என்பதைப் பற்றி லயன் காமிக்ஸ்-ல் ஒரு தொடர் வந்தது (ஒரு சினிமா போல, கதை எழுத ஒருவர் அதை screenplay வாக மாற்ற ஒருவர், ஒரு ஓவியர் அதை மாதிரி வரைபடமாக (rough sketch) மாற்றி அதற்கு வசனகர்த்தா வசனம் எழுதி பின் அதிலிருந்து இறுதி படம் உருவாக்குவார் –– இறுதியாக ஸ்பெசல் எபக்ட் சிலசமயம் வண்ணங்கள் என்று அதைப்பற்றி நிறைய சொல்லலாம். ஒரே நேரத்தில் அதிக வசனம் வரவேண்டி இருந்தால் அதை எப்படி ஓவியர் பல கோணங்களில் இருந்து வரைந்து விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொள்வார் என்றெல்லாம் விளக்கி இருந்தது) அதைப் படித்த பிறகு காமிக்ஸ் மேல் எனக்கிருந்த ஈடுபாடு அதிகமாகிவிட்டது. அப்போது வந்த லயன் காமிஸ் ஹீரோக்களில் எனக்குப் பிடித்தவன் லக்கி லூக் (இந்த ஹீரோ பற்றி மற்றொரு சமயம் சொல்கிறேன்).

அதன் பிறகு கல்லூரி சேர்ந்து நேரம் அதிகம் கிடைக்காத காரணத்தால் காமிக்ஸ் படிக்கிற சந்தர்ப்பம் ஏற்படவில்லை. வேலை சேர்ந்தபிறகு எனக்கு asterix காமிக்ஸ் அறிமுகமாகி பிடித்துப்போனது. மற்ற நிறைய ஆங்கில காமிக்ஸ் இருந்தாலும் asterix தான் என்னுடைய favourite. சமீபத்தில் ஒருநாள் தான் கவனித்தேன் asterix ன் கதாசிரியர் Rene Goscinny தான் luky luke கின் கதாசிரியரும் என்கிற உண்மயை. இந்த ஒற்றுமை தற்செயலானதாக எனக்குப் படவில்லை.

5 comments:

Anonymous said...

dei its a good start. aana tamil fonts seriya kedaikkaliya? try to get a better font which helps to type without mistakes.

MSK said...

arul,
i got the pun in your comment. i will try to be careful about the spellings.

thanks for your comment.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

வாங்க வாங்க!!

நானும் கார்ட்டூன் படங்களைப்பத்தி யோசிச்சிருக்கேன். நூலகங்களில் ஆங்கில/பிரெஞ்சு மொழிகளில் பெரியவர்களுக்கான பகுதியில் கார்ட்டூன் புத்தகங்களை வச்சிருப்பாங்க.

-மதி

MSK said...

வணக்கம் மதி,
ஏன் யோசிப்பதோடு நிறுத்திக்கொண்டீர்கள், ஒரு காமிக்ஸ் எடுத்து படித்துப் பார்த்திருக்கலாமே :-) (i would recommend asterix)

நீங்கள் சொல்வது சரிதான், தமிழில்தான் காமிக்ஸ்க்கு மதிப்பு குறைவேதவிர மற்ற நாடுகளில் இதற்கு போதுமான வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக ஜப்பனில் காமிக்ஸ் புழக்கம் அதிகம். நான் குறிப்பிட்டிருந்த Rene Goscinny ஒரு ப்ரென்சுகாரர் நான் படித்தது அவரின் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்களைத்தான்.

உங்களுடைய வலைப்பதிவுகளைப்பார்த்தேன், நன்று.


-MSK

Anonymous said...

இந்தப் பதிவைப் பாருங்கள். உங்களுக்கு உபயோகப்படலாம்.

http://madippakkam.blogspot.com/2006/06/blog-post_114974529066605796.html